யாழ் மாவட்டத்தில் அச்சுறுத்தும் ஆப்பிரிக்க நத்தைகள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பகுதியில் ஆப்பிரிக்க நத்தைகளின் பெருக்கம் விவசாயச் செய்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அதற்கமைய, இந்த ஆப்பிரிக்க நத்தைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நெடுந்தீவு உள்ளிட்ட தீவுகளில் ஆப்பிரிக்க நத்தைகள் பெருகி, எவ்வாறு விவசாயத்தைப் பாதித்துள்ளதென நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.
அவர் யாழ் மாவட்ட விவசாயக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(Visited 2 times, 2 visits today)





