ஐரோப்பா முக்கிய செய்திகள்

குளிர் பருவம் ஆரம்பம் – பிரித்தானியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவில் NHS தலைவர்கள் “ஃப்ளூ தடுப்பூசி SOS” பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

குளிர் பருவம் ஆரம்பித்துள்ள நிலையில், மிகக் கடுமையான காய்ச்சல் தொற்றுநோயை எதிர்த்து தடுப்பூசி போடுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

H3N2 காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் H3N2 வகை தொற்றின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹிலாரி ஜோன்ஸ் ( Hilary Jones) எச்சரித்துள்ளார்.

இது நோய் எதிர்ப்பு சக்தியை பயனற்றதாக்கிவிடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற நிலைமைகள் உள்ளவர்கள் உட்பட தகுதியான குழுக்கள் இலவச தடுப்பூசியைப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NHS அடுத்த வாரம் 2.4 மில்லியன் தடுப்பூசி முன்பதிவுகளை வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டில் காய்ச்சல் காரணமாக சுமார் 7,500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!