கிண்ணியாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!
கிண்ணியா_ தோனா முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றிற்கு முன்னால் ஆணொருவரின் சடலமொன்று இன்று (16) கிண்ணியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூரை சேர்ந்த 55 மதிக்கத்தக்கவருடையது என கிண்ணியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிண்ணியா தோனாவில் கடலூர் முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றிற்கு முன்னால் சடலம் மீட்கப்பட்டது.
சிகப்பு நிற சட்டையும், சாம்பல் நிற கருப்பு கோடு போட்ட சாரமும் அணிந்திருந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அருகில் கால் ஒன்றை கழட்டி வைத்ததவாரே இருந்துள்ளார். அவர் ஊன்றிச் செல்லும் கை தாவல் ஒன்றும் சடலம் காணப்படும் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டுள்ளது
குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பில் கிண்ணியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





