பிலிப்பைன்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் மாபெரும் பேரணி!
பிலிப்பைன்ஸில் சீரற்ற வானிலை காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுத்தனர். இதில் பலர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் வெள்ளக் கட்டுப்பாட்டு ஊழல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும் எனக் கோரி பிலிப்பைன்ஸ் தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று ஒன்றுக்கூடியியுள்ளனர்.
மூன்று நாள் நடைபெறவுள்ள இந்த பேரணியில் 27000 பேர் வரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலாபகரமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும், திட்டங்களில் உள்ள முரண்பாடுகளுக்குப் பொறுப்பேற்பதைத் தவிர்ப்பதற்கும் அரசியல் தலைவர்களுக்கு நிறுவனங்கள் இலஞ்சம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொறுப்புக்கூறும் வகையில் மேற்படி இலஞ்ச ஊழல் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இதனை ஏற்பாடு செய்துள்ள மதக்குழுவொன்று தெரிவித்துள்ளது.





