கம்பளி மாமத் (woolly mammoth) யானையை மீளுருவாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள்!
கம்பளி மாமத் (woolly mammoth) யானையை மீளுருவாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் சாத்தியமான சமிக்ஞையை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி கம்பளி மாமத்தின் பாதுகாக்கப்பட்ட எச்சங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக ஆர்.என்.ஏவைப் பிரித்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பானது அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் புரட்சியை ஏற்படுத்தும்.
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் (Stockholm University) மற்றும் டென்மார்க்கின் குளோப் இன்ஸ்டிடியூட் (Globe Institute) விஞ்ஞானிகள் இணைந்து இந்த கண்டுப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த முறையின் கீழ் கம்பளி மாமத், டோடோ மற்றும் டாஸ்மேனியன் புலி ஆகிய உயிரினங்களை மீள உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் மாமத்தின் தசை திசுக்களில் 300 க்கும் மேற்பட்ட புரத-குறியீட்டு ஆர்.என்.ஏ மூலக்கூறுகளையும் 60 மைக்ரோஆர்.என்.ஏக்களையும் அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கம்பளி மாமத் யானைகள் 39000 வருடங்களுக்கு முன்பு சைபரஸில் வாழ்ந்த பனியுக விலங்குகளாகும்.




