இலங்கை

புரியாத எழுத்துக்களில் மருந்து சீட்டுக்களை எழுத கூடாது – வைத்தியர்களுக்கு எச்சரிக்கை!

மருந்துச் சீட்டுகளை எழுதுதல் மற்றும் பரிந்துரைத்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மருத்துவ நிபுணர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

நோயாளி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த வழிகாட்டுதல்கள் அவசியம் என்று கவுன்சில் எடுத்துரைத்துள்ளது.

இது தொடர்பில் மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிப்பில், சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச் சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய தெளிவின்மை சரியான மருந்தை அடையாளம் காண்பதை கடினமாக்கியுள்ளது எனவும் இது நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளிதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்களுக்கான நெறிமுறை நடத்தை வழிகாட்டுதல்களில் மருந்துச் சீட்டுகள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதாகவும், அவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை பின்பற்ற தவறும் பட்சத்தில்  மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!