பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு – விமான சேவைகளை நிறுத்திய தென்கொரியா!
தென் கொரியாவில் பல்கலைக்கழக நுழைவு தேர்வை முன்னிட்டு நாட்டின் விமான நிலைய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் அரை மில்லியன் தேர்வாளர்கள் இதில் பங்கேற்ற நிலையில், காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலத் தேர்வின் கேட்கும் புரிதல் பிரிவுக்கு (listening comprehension section) மாணவர்கள் அமர்ந்திருக்கும்போது எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, விமானங்கள் தரையிறங்கவோ, அல்லது புறப்படும் செயற்பாட்டை மேற்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு 65 சர்வதேச வருகை மற்றும் புறப்பாடுகள் உட்பட 140 விமானங்களை பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வாளர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்வதற்காக நிதிச் சந்தைகளும் அலுவலகங்களும் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மொத்தம் 554,174 பேர் பதிவு செய்தனர், இது கடந்த ஆண்டை விட 6% அதிகமாகும்.





