அரசாங்கத்தின் பிடியில் காவல்துறை – நாமல் அதிருப்தி!
அரசு ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள நாமல் ராஜபக்ச இந்த காலக்கட்டம் சவாலானது எனவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை காவல்துறை “முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது” என்றும், தேசிய பாதுகாப்பு சரிந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட அதிக வரிச்சுமையால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடவில் நடைபெறும் எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்க அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இது யாரையும் ராஜாவாக்கும் போராட்டம் அல்ல, மாறாக மக்கள் சார்பாக அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்யும் போராட்டப் பேரணி என்வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





