இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியன்று நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என்று அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதே வேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)





