தமிழர்களுக்கு நீதி வழங்க சஜித் அணி பச்சைக்கொடி!
வடக்கு மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது என்று அக்கட்சியின் பேச்சாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளான்றுக்கு அரசாங்கம் 200 ரூபா வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு இல்லை.
அதனை நாம் ஆதரிக்கின்றோம். அதேபோல வடக்கு மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி அவசியம் என்ற நிலைப்பாட்டிலும் எமது கட்சி உறுதியாக உள்ளது.
இந்த வரவு- செலவுத் திட்டத்தை பார்கும்போது ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் வரவு- செலவுத் திட்டத்தை முன்வைப்பது போல்தான் இருந்தது.” எனவும் மரிக்கார் குறிப்பிட்டார்.





