ஸ்வீடன் தலைநகரில் பேருந்து விபத்து – பலர் மரணம்
ஸ்வீடன்(Swedan) தலைநகர் ஸ்டாக்ஹோமில்(Stockholm) ஒரு பேருந்து நிறுத்தத்தில் இரட்டை அடுக்கு பேருந்து மோதியதில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பாலினம் அல்லது வயது குறித்த எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
ஸ்வீடிஷ் தலைநகரின் ஆஸ்டர்மால்ம்(Östermalm) மாவட்டத்தில் உள்ள வால்ஹல்லாவாகன்(Valhallavägen) என்ற தெருவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், இது ஒரு தாக்குதல் என்பதற்கான எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.





