பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய சீக்கிய பெண்
குருநானக் தேவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நவம்பர் 4ம் திகதி பாகிஸ்தானுக்குச் சென்ற பக்தர்கள் குழுவில் இருந்து ஒரு பெண் சீக்கிய யாத்ரீகர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவர் பஞ்சாபின்(Punjab) கபுர்தலா(Kapurthala) மாவட்டத்தில் வசிக்கும் சரப்ஜித் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமிர்தசரஸில்(Amritsar) உள்ள அட்டாரி(Attari) எல்லை வழியாக 1,923 யாத்ரீகர்கள் குழுவுடன் அந்தப் பெண் நவம்பர் 4ம் திகதி பாகிஸ்தானுக்குச் சென்றார்.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு ஆன்மீக தளங்களை பார்வையிட்டு 10 நாட்கள் கழித்த பிறகு, 1,922 பேர் கொண்ட குழு இந்தியா திரும்பியது.
அவர் காணாமல் போன பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள உளவுத்துறை அமைப்புகள் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயற்சித்து வருகின்றன.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.





