கிரீன்லாந்தில் சொத்து வாங்க காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு சிக்கல்!
கிரீன்லாந்தில் வெளிநாட்டினர் சொத்துக்களை வைத்திருக்கும் உரிமையை கட்டுப்படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட சட்டமூலத்திற்கு 21 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அத்துடன் 06 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இதன்படி டென்மார்க் அல்லாத குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், நிரந்தர குடியிருப்பாளர்களாக இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரீன்லாந்தில் தங்கள் அனைத்து வரிகளையும் செலுத்தியிருந்தால் மட்டுமே சொத்து அல்லது நில பயன்பாட்டு உரிமைகளை வாங்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம் கிரீன்லாந்து, பரோயே தீவுகள் (Faroe Islands) மற்றும் டென்மார்க்கைச் (Denmark ) சேர்ந்த மக்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே கிரீன்லாந்தில் சொத்து மற்றும் நில பயன்பாட்டு உரிமைகளை வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதை அடிகோடிட்டு காட்டுகிறது.
இந்த சட்டம் வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரவுள்ளது.
டேனிஷ் நாளிதழான பொலிடிகன் (Politiken) நடத்திய ஒரு கணக்கெடுப்பில், கிரீன்லாந்தில் சொத்து வாங்குவதில் அமெரிக்கா அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி ட்ரம்ப் டென்மார்க்கை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது தொடர்பில் பலமுறை கருத்து வெளியிட்டுள்ளார். இந்நிலையிலேயே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





