கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!
இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுய-பரிசோதனை (self-check-in service) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் மார்கழி மாதத்தில் மாத்திரம் ஏறக்குறைய 300000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு அவர்களின் பயணத்தை மேம்படுத்தும் வகையிலும், தாமதங்களை குறைக்கும் வகையிலும் சுய பரிசோதனை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனத்தின் ஐடி குழுவால் சாத்தியமான இந்த முயற்சி, கடந்த மாதம் புறப்படும் முனையத்தில் 20 புதிய சுய-பரிசோதனை கியோஸ்க்குகள் (kiosks) நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)





