அமெரிக்காவில் விஷ வாயு கசிவு – ஆபத்தான நிலையில் 11 பேர்!
அமெரிக்காவில் ஆபத்தான விஷ வாயு கசிந்ததால் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓக்லஹோமாவின் (Oklahoma) வெதர்ஃபோர்டில் (Weatherford) உள்ள கார் நிறுத்துமிடத்தில் லொறியொன்றில் இருந்து ஆபத்தான நீரற்ற அம்மோனியா வாயு கசிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் குறித்த பகுதியில் இருந்து 500-600 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
25,000 பவுண்டுகள் எடையுள்ள இரசாயணத்தை ஏற்றிச் சென்ற லொறியில் ஏற்பட்ட சிறு தவறால் இரசாயண கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் இருந்த சில வணிக நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன.
கசிவுக்கான காரணத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர், மேலும் அம்மோனியா வெளிப்பாட்டின் ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.





