இங்கிலாந்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மருத்துவர்கள்!
இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஊதிய உயர்வு கோரி 05 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நடவடிக்கையானது மருத்துவ சேவைகளை குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA) 26 சதவீத ஊதிய உயர்வை கோருகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் ( Wes Streeting) , மருத்துவர்கள் ஏற்கனவே மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 சதவீத அதிகரிப்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை மார்ச் 2023 முதல் மருத்துவர்கள் நடத்தும் 13வது வெளிநடப்பு இதுவாகும். கடந்த ஜுலை மாதம் நடந்த கடைசி வேலைநிறுத்தத்தால் சுகாதார சேவைக்கு £300 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.





