சீனாவில் பிரபலமான இரண்டு செயலிகளுக்கு தடை – ஓரினச்சேர்க்கையாளர்கள் கடும் அதிருப்தி
சீனாவில் பிரபலமான ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ப்ளூட் (Blued) மற்றும் பின்கா (Finka) என்ற டேட்டிங் செயலிகள் சீனாவில் செயற்படாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகத்தின் (CAC) உத்தரவுக்கு அமைய, குறித்த இரண்டு செயலிகளும் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் பிரபலமான ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் செயலிகளில் ப்ளூட் ஒன்றாகும்.
மில்லியன் கணக்கான பயனர்கள் இந்த செயலியை சீனாவில் பயன்படுத்தி வந்ததாக ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சீனாவின் கடுமையான சட்டங்களுக்கு மதிப்பளித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செயலிகளின் தடை காரணமாக சீனாவின் ஓரினச்சேர்க்கையாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





