வேலை தேட செயற்கை உதவும் நுண்ணறிவு – சிங்கப்பூரில் 3,500க்கும் அதிகமானோர் நாட்டம்
சிங்கப்பூரில் வேலை தேடுவதற்குச் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாண்டில் இதுவரை 3,500க்கும் அதிகமானோர் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடியுள்ளனர்.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அதற்காக ஒரு தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்க ஊழியர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் தொழிலாளர் இயக்கத்தால் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
புதிய கருவியைப் பயன்படுத்தி வேலை தேடுபவர்கள் அவர்களின் தயார்நிலையை மதிப்பிடலாம் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், வேலைச்சந்தையில் தேவைப்படும் திறன்களையும் எளிதில் அடையாளம் காணலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கருவி சுய விவரப் படிவத்தை உருவாக்கவும், வேலை நேர்காணலுக்குத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் கைகொடுக்கும். வேலை தேடுபவர்களுக்கான பயிற்சித் தெரிவுகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





