எத்தனை மனைவிகள்? சிரியா ஜனாதிபதியிடம் வினவிய ட்ரம்ப்
சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாராவுக்கு (Ahmed al-Sharaa) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வாசனைத் திரவம் வழங்கிய போது கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது.
வெள்ளை மாளிகையில் நடந்த அச்சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.
அல்-ஷாராவுக்குத் தமது பெயரிலான வாசனைத் திரவத்தை ட்ரம்ப் பரிசாகக் கொடுத்தார். வாசனைத் திரவத்தை அவர் மேல் தெளித்துவிட்ட ட்ரம்ப், “இதுதான் சிறந்த வாசனைத் திரவம். மற்றொன்று உங்கள் மனைவிக்கு. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என நகைச்சுவையாகக் வினவியுள்ளார்.
அதற்குச் சிரித்துக்கொண்டே ஒரு மனைவிதான் என அல்-ஷாரா குறிப்பிட்டுள்ளார்.
“உங்களைப் போன்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது,” என ட்ரம்ப் மீண்டும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
அல்-ஷாரா பதிலுக்கு, “உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என ட்ரம்பிடம் வினவியுள்ளார்.
“இப்போதைக்கு ஒன்று,” என ட்ரம்ப் பதில் சொல்ல, அந்த இடமே சிரிப்புச் சத்தத்தில் நிறைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 80 ஆண்டுகளில் சிரியா ஜனாதிபதி ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.





