அரசியல் இலங்கை

மக்கள்தான் எங்களுக்கு முக்கியம்: எதிரணிகள் ஆட முடியாது!

ஊடகம்,பணம், அதிகாரம்,குடும்ப பின்னணி எதுவும் இல்லாத நிலையில் மக்களின் எதிர்பார்ப்புடனே ஆட்சியை பெற்றோம். மக்களுடன் தான் எமது பிணைப்பு உள்ளது.

எமது முழு அரச செயற்பாடுகளும் மக்களின் பொறுப்கூறலை நிறைவேற்றும் வகையில் உள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,

“ இந்நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ள கருப்பு இராச்சியமொன்று உள்ளது.

அந்த இராச்சியம் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. முக்கிய இடங்களில், அரசியலில் முக்கிய பதவிகளில் இருந்தன.

இந்த கருப்பு இராச்சியத்தில் இருந்து நாட்டையும் எமது பிள்ளைகளையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மீட்போம்.

நாட்டின் தேசிய ஒற்றுமை அழிந்து போன வரலாறு உள்ளது. எங்காவது சமூக பிரச்சினை எழும்போது பள்ளிவாசலை தாக்குவார்கள்.

இராணுவ புலனாய்வு பிரிவினருடன் கலந்துரையாடிய போது ஒரே வங்கிக் கணக்கில் இருந்து முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மக்களின் வரிப்பணத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக குரல் எழுப்ப சிங்கள இனவாத குழுக்களுக்கும் சிங்களவர்களுக்கு எதிராக குரல்கொடுக்க முஸ்லிம் இனவாத குழுக்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது.

தமது இருப்பிற்காக இனவாதத்தை பயன்படுத்தினார்கள். இவ்வாறு செய்து பிரச்சினைகளை மறைத்தார்கள்.

எமது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு இனவாத மதவாத சம்பவமும் நடைபெறவில்லை. இனவாதத்திற்கு எமது நாட்டில் எந்த இடமும் கிடையாது.

வீழ்ச்சியடைந்த நாட்டை இன்று பலமான தூண்களின் மேல் அடித்தளம் இட்டுள்ளோம். கைத்தொழிலாளர்கள்,வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

பல்வேறு துறைகளுக்கான வாயில்களை திறந்துள்ளோம். இன்னும் பல தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் பலத்துடனும் நிலைத்தலுடனும் நாம் இதனை செய்துவருகிறோம்.

எமக்கு எதிராக சில தோல்வி அடைந்த குழுக்கள் இணைந்து வருகின்றன. நாட்டுப் பற்றுள்ள கெப்பட்டிபொலவும் அதற்கு எதிராக செயல்பட்ட டொன் ஜூவான் தர்மபாலவும் இணைந்துள்ளனர்.

நாட்டுப் பற்றுள்ளவர்கள் என்றும் தேச துரோகிகள் என்றும் ஒருவரை ஒருவர் விமர்சித்த அனைவரும் இன்று இணைந்துள்ளனர்.

லசந்தவின் நண்பர்களும் லசந்தவின் கொலையாளிகளும் ஒன்றாக செல்கின்றனர். மத்திய வங்கி திருடர்களும் அதனை விமர்சித்தவர்களும் ஒன்றாக உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள்,முன்னாள் எம்.பிகள் ஒன்றாக திருடியவர்கள், ஒன்றாக மோசடி செய்தவர்கள் இணைந்துள்ளனர்.

இவர்களுக்கிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. அனைவருக்கும் எதிராக வழக்குகள் உள்ளன.

விசாரணைகள் உள்ளன. வரப்பிரசாதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இவை மக்களின் பிரச்சினைகள் அல்ல. அவர்கள் சுயதிருப்திக்காக செயற்படுகிறார்கள்.

இலங்கை வரலாற்றில் முற்போக்கான மக்கள் நேய அரசாங்கம் ஒன்று உருவாகி உள்ளதால் அதற்கு எதிராக இவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

மக்களின் ஒன்றிணைவுடன் நாம் இந்த வெற்றியை பெற்றோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தான் எமது பிரதான பணியாகும்.

இருந்தாலும் எதிரானவர்களுக்கு நினைத்தவாறு ஆட இடமளிக்க முடியாது.

எமக்கு ஊடகம், பணம், அதிகாரம், குடும்ப பின்னணி எதுவும் இல்லாத நிலையில் மக்களின் எதிர்பார்ப்புடனே ஆட்சியை பெற்றோம்.

மக்களுடன் தான் எமது பிணைப்பு உள்ளது. எமது முழு அரச செயற்பாடுகளும் மக்களின் பொறுப்கூறலை நிறைவேற்றும் வகையில் உள்ளது.

மக்களுக்காக நாம் செயற்படும் போது எதிர்கட்சிகள் அவர்களின் அரசியலை ஊடகங்களில் மாத்திரம் வெளிக்காட்டுகின்றனர்.

கடந்த காலத்தைப் போன்று எதிரணியை முடக்க சிஐடியையோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவையோ நீதிமன்றத்தையோ அரச அதிகாரத்தையோ நாம் பயன்படுத்த மாட்டோம்.

நாம் கட்டியெழுப்பும் மக்கள் அதிகாரத்தின் ஊடாக இந்த சிறு சிறு முனகல்களை அடக்க வேண்டும். இந்த பிற்போக்கு சக்திக்கு எதிராக பாரிய மக்கள் சக்தியை அடுத்த வருடத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.

அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த இயக்கத்தின் நீண்ட பயணத்தின் வரலாற்று ரீதியான வாரிசுகளாக நாங்கள் மாறிவிட்டோம்.

அந்த நீண்ட பயணத்தின் தற்போதைய வாரிசுகளாக நாங்கள் மாறிவிட்டோம். இதன் பயனாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.

எனவே, அந்த வரலாற்றில் எங்கள் சகோதர சகோதரிகளின் ஆன்மீக எதிர்பார்பை வேறு எவரையும் விட எங்கள் தோள்களில் சுமக்கிறோம்.” என்றார் ஜனாதிபதி.

(Visited 2 times, 2 visits today)

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!