கடந்த ஆண்டு உலகளவில் காசநோய் காரணமாக 1.23 மில்லியன் பேர் மரணம்: WHO
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட ஒரு அறிக்கையில், காசநோய் (tuberculosis) உலகளவில் தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது, இதனால் 2024ம் ஆண்டில் 1.23 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.
இது 2023ம் ஆண்டை விட மூன்று சதவீதம் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 10.7 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 5.8 மில்லியன் ஆண்கள், 3.7 மில்லியன் பெண்கள் மற்றும் 1.2 மில்லியன் குழந்தைகள் அடங்குவர்.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மல் மூலம் காசநோய் காற்றின் வழியாக பரவுகிறது மற்றும் முக்கியமாக நுரையீரலை பாதிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 25 சதவீத வழக்குகளுடன் இந்தியா(India) முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து இந்தோனேசியா(Indonesia) 10 சதவீதம், பிலிப்பைன்ஸ்(Philippines) 6.8 சதவீதம், சீனா(China) 6.5 சதவீதம் மற்றும் பாகிஸ்தான்(Pakistan) 6.3 சதவீதத்தில் உள்ளன.





