AI தொழில்நுட்பத்தை திருமணம் செய்த ஜப்பானிய பெண்!
ஜப்பானியப் பெண் ஒருவர் ChatGPT என்ற chatbot-இல் உருவாக்கிய AI ஆளுமையை “திருமணம்” செய்து கொண்டுள்ளார்.
32 வயதான கனோ என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண் கிளாஸ் என்ற AI தொழில்நுட்பத்தை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இந்த திருமணத்தை “2D கதாபாத்திர திருமணங்களில்” நிபுணத்துவம் பெற்ற ஒகயாமா நகர நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
ஆறுதல் மற்றும் ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை நாடிய அவர் பின்னர் அதன்பால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கனோவின் “திருமணம்” ஜப்பானில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
(Visited 5 times, 6 visits today)





