இந்தியா செய்தி

டெல்லியின் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றவாளிகள்!

டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவத்தில் 08 பேர் உயிரிழந்த நிலையில், பயங்கரவாத செயலாக கருதப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் நபி உட்பட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மருத்துவர்கள் இந்தியாவின் பல பாகங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 6 ஆம் திகதி டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்க இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் தாக்குதல் தாரிகளான உமரும் மற்றொரு முக்கிய சந்தேக நபரான டாக்டர் முசம்மில் கனாயும் 2021 ஆம் ஆண்டு துருக்கிக்கு விஜயம் செய்தபோது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஎம்) இன் தீவிர செயல்பாட்டாளர்களைச் சந்தித்ததாகத் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 5 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!