தென்கொரியாவில் பாதசாரிகள் மீது மோதிய லொறி – 02 பேர் பலி!
தென் கொரியாவின் புச்சியோன் (Bucheon) நகரில் உள்ள சந்தை தொகுதியில் லொறியொன்று பாதசாரிகள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதனால் 18 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 60 வயதுடைய அடையாளம் தெரியாத லொறி ஒட்டுநர் ஒருவரை கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தனது வாகனம் பழுதடைந்ததாகவும், பாதுகாப்பு கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ஓட்டுநர் கூறியுள்ளார்.
காயமடைந்த 18 பேரில் 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





