புதுடெல்லி குண்டு வெடிப்பு: இலங்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
புதுடெல்லியில் குண்டு வெடித்துள்ள சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அச்சம்பவத்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார்.
இந்தியாவில் குண்டு வெடித்துள்ளது. எமது நாட்டு தேசிய பாதுகாப்புக்கும் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
“தற்போது அவ்வாறு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அச்சுறுத்தல் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெறவில்லை. இலங்கையில் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.
முப்படைகள் மற்றும் பொலிஸார் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.
எனவே, பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் இல்லை.” என்று குறிப்பிட்டார்.
(Visited 4 times, 4 visits today)





