ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் இன்று வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த 176 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் விமானம் முழு பாதுகாப்பு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டாய சோதனைகள் முடிந்ததும் விமானம் சேவைக்குத் திரும்பும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
(Visited 4 times, 4 visits today)





