இலங்கை

அரச வாகனம் வேண்டும்: சாமர எம்.பி. அடம்பிடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் வாகனம் வழங்கப்படுமானால் அதனை நிராகரிக்கப்போவதில்லை – என்று சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

“ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குமாறு நான் கோரவில்லை.

மாறாக பாதுகாப்பு வழங்குமாறே வேண்டுகோள் விடுத்துள்ளேன். அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

எனினும், வாகனம் வழங்கப்பட்டால் அதனை நிராகரிக்கமாட்டேன். ஏனெனில் பதுளையில் இருந்து கொழும்பு வருவதற்கு வாகனம் அவசியம்.” எனவும் சாமர சம்பத் எம்.பி. குறிப்பிட்டார்.

அதேவேளை, எதிரணி உறுப்பினருக்குரிய கடமையை நான் சரிவர நிறைவேற்றி வருகின்றேன். அரசாங்கம் தவறிழைக்கும்பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டும் உரிமை எனக்கு உள்ளது.

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் நான் கலந்துகொள்வோம்.

சுதந்திரக்கட்சியாக நாம் களமிறங்குவோம்.” எனவும் சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. குறிப்பிட்டார்.

(Visited 6 times, 6 visits today)

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!