தென்மேற்கு சைப்ரஸில் (Cyprus) உள்ள கடலோர நகரத்தில் நிலநடுக்கம்!
தென்மேற்கு சைப்ரஸில் (Cyprus) உள்ள கடலோர நகரமான பாஃபோஸிலிருந்து (Paphos) வடகிழக்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 09:31 மணிக்கு (12 மணி) ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக நிலடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் மையம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)





