வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வது சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக் குறைப்பானது, அமெரிக்கக் கல்வி நிறுவனங்களின் அழிவிற்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைவது, அமெரிக்காவிலுள்ள அதிகளவிலான கல்வி நிறுவனங்களை வணிகத்திலிருந்து வெளியேற்றக்கூடும்.
அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு மாணவர்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை வழங்குகின்றனர்.
உள்நாட்டு மாணவர்கள் செலுத்துவதை விட, வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு மடங்கு அதிகமாகப் பணத்தைச் செலுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்களை நான் விரும்புவதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. எனினும், அவர்கள் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணி நாட்டுக்குக் கிடைக்கிறது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களைப் படிக்க அனுமதிப்பது, நாட்டின் உயர்கல்வி முறையை நிதி ரீதியாக வலுவாக வைத்திருக்கும் வணிக நடைமுறைக்கு நல்லது.
பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்பட வெளிநாட்டு மாணவர்களை நம்பியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.





