இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் தலிபான்கள்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்(Islamabad) உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
“இஸ்லாமாபாத்தில் உள்ள நீதித்துறை ஆணையத்தைத் தாக்கியது எங்கள் போராளிகள். பாகிஸ்தானின் இஸ்லாமியமற்ற சட்டங்களின் கீழ் தீர்ப்புகளை நிறைவேற்றிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் குறிவைக்கப்பட்டனர்,” என்று பாகிஸ்தான் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும் வரை பல தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
பாகிஸ்தானில் நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் குண்டுவெடிப்பு – 12 பேர் பலி!
(Visited 1 times, 1 visits today)





