இலங்கைக்கு தரக்குறைவான கண் மருந்து கொடுத்த இந்திய நிறுவனத்தில் சோதனை
இலங்கைக்கு தரம் குறைந்த கண் மருந்துகளை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குஜராத்தை தளமாகக் கொண்ட இந்தியானா மருந்து நிறுவனம் தொடர்பில் மத்திய மருந்து தர நிர்ணய அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தியாவின் உச்ச மருந்து ஏற்றுமதி கவுன்சிலும், இந்திய மருந்து நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
இந்தியானா மருந்து நிறுவனத்தால் வழங்கப்பட்ட கண் மருந்துகளைப் பயன்படுத்தியதன் மூலம் 30 நோயாளிகளுக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் முறையிட்டதை அடுத்து, இந்திய மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் இந்தியானா மருந்து நிறுவனம் மீது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மருந்து ஏற்றுமதி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் உதய பாஸ்கர், இந்திய நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், தரம் குறைந்த கண் மருந்துகளை வழங்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் மூலம் இந்திய மருந்துத் துறைக்கு இந்திய நிறுவனம் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.