துப்பாக்கி உரிமம் தொடர்பான சட்ட சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் நியூசிலாந்து!
துப்பாக்கி சட்ட சீர்த்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளதாக நியூசிலாந்து இன்று அறிவித்தது.
துப்பாக்கி உரிமையை ஒழுங்குபடுத்துவதில் காவல்துறை அதிகாரிகளின் ஈடுபாட்டை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் மசூதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களை தொடர்ந்து துப்பாக்கி ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதனை தணிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதல் நடத்தியவர் சட்ட அமலாக்க கண்காணிப்பை ஈர்க்காமல் ஏராளமான ஆயுதங்களை சட்டப்பூர்வமாகப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கி பாதுகாப்பு ஆணையம் 2022 முதல் துப்பாக்கி உரிமையை மேற்பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





