இலங்கை செய்தி

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட செய்தி

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலதிக நேரச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கடந்த 4 மாதங்களில் அரசாங்க விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் கடந்த சனிக்கிழமை முதல் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் ஆர்டர்களை வழங்காததாலும் குறைந்தபட்ச இருப்புக்களை பேணாததாலும் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்புடன், எரிபொருள் பாவனையாளர்களின் தேவை உடனடியாக அதிகரித்துள்ளமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்னதாக விடுத்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் ஐஓசி ஆகியவற்றிடம் போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, விநியோகஸ்தர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத எரிபொருள் இருப்பை எப்போதும் பேண வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிசீலனை செய்து உரிமங்களை இடைநிறுத்துமாறும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!