மாலியில் தூக்கிலிடப்பட்ட இளம் டிக்டாக் பிரபலம்
மாலியின்(Mali) டோங்காவைச்(Tonga) சேர்ந்த இளம் டிக்டாக் பிரபலம் மரியம் சிஸ்ஸே(Mariam Cisse) ஆயுதமேந்திய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மரியம் சிஸ்ஸேவின் அதிர்ச்சியூட்டும் மரணம் இணையத்தில் சுதந்திரமாகப் பேசுபவர்களுக்கு வடக்கு மாலியில் வாழ்க்கை ஆபத்தாக மாறியுள்ளது.
மாலியின் டிம்பக்டு(Timbuktu) பகுதியில் உள்ள டோங்கா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த 22 வயதான மரியம் சிஸ்ஸே டிக்டாக்கில் கிட்டத்தட்ட 90,000 பின்தொடர்பவர்கள் கொண்டவர்.
அங்கு அவர் தனது அன்றாட வாழ்க்கை, சமையல், நடனம் மற்றும் மாலி ராணுவ வீரர்களுக்கு ஆதரவைக் காட்டுவது பற்றிய வேடிக்கையான மற்றும் எளிமையான வீடியோக்களைப் வெளியிட்டு வந்துள்ளார்.
நவம்பர் 6, 2025 அன்று, டோங்காவில் மரியம் சிஸ்ஸே நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தபோது ஆயுதமேந்திய தீவிரவாதிகள் அவளை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக அவளுடைய சகோதரர் தெரிவித்துள்ளார்.
பின்னர், மறுநாள் காலை மரியம் சிஸ்ஸே டோங்காவின் சுதந்திர சதுக்கத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டு அவரது குடும்பத்தினர் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டுள்ளார்.





