அமெரிக்காவில் உயிரிழந்த 23 வயது ஆந்திர மாணவி
அமெரிக்காவின் டெக்சாஸில்(Texas) உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் 23 வயது இந்திய மாணவி ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில்(Andhra) வசிக்கும் ராஜி எனும் ராஜ்யலட்சுமி யார்லகடா(Rajyalakshmi Yarlagadda) என்ற மாணவி சமீபத்தில் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம்-கார்பஸ் கிறிஸ்டியில்(Texas A&M University-Corpus Christi) பட்டம் பெற்று அமெரிக்காவில் வேலை தேடி வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக அவர் கடுமையான இருமல் மற்றும் மார்பு வலியால் அவதிப்பட்டு வந்தார் என்று ராஜ்யலட்சுமி யார்லகடாவின் உறவினர் சைதன்யா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய ராஜ்யலட்சுமியின் உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)





