மலேசியா அருகே மியான்மர் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து – 7 பேர் மரணம்(Update)
தாய்லாந்து-மலேசியா எல்லைக்கு அருகே மியான்மரிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான குடியேறிகளின் படகு இன்று விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மியன்மாரின் புதிடாங்கிலிருந்து (Buthidaung) சுமார் 300 பேருடன் புறப்பட்ட கப்பல் மலேசியாவை நெருங்கியதும் பயணிகள் மூன்று சிறிய படகுகளுக்கு பிரிக்கப்பட்ட பின்னர் அதில் ஒரு படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை மற்றும் கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த நேரம், சரியான இடம் மற்றும் ஏனைய இரண்டு படகுகளின் நிலை தெளிவாகத் தெரியவில்லை என்று மலேசிய கடல்சார் அமலாக்க அதிகாரி ரோம்லி முஸ்தபா(Romli Mustafa) குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
தாய்லாந்து – மலேசியா எல்லைக்கு அருகே படகு விபத்து : பலர் மாயம்!





