இந்தியா செய்தி

அசாம் நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்த 3 கல்லூரி மாணவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

அசாமில்(Assam) காணாமல் போன தேசிய தொழில்நுட்பக் கழகத்தின்(NIT) மூன்று மாணவர்களின் உடல்கள் திமா ஹசாவோ(Dima Hasao) மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 20 வயதுடைய சர்வ கிருத்திகா மற்றும் சவுஹர்த் ராய், 19 வயதுடைய ராதிகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிருத்திகா மற்றும் ராய் உத்தரபிரதேசத்தைச்(Uttar Pradesh) சேர்ந்தவர்கள் என்றும், ராதிகா பீகாரைச்(Bihar) சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் ஹரங்காஜாவோ(Harangajao) கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினம் அன்றே ஒரு மாணவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மற்ற இருவரின் உடன் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மூவரும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எனவும் அவர்கள் நிறுவன நெறிமுறைகளைப் பின்பற்றாமல் வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் திலீப் குமார் பைத்யா(Dilip Kumar Baidya) தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!