மத்திய கிழக்கு நாடுகளில் தலைமறைவாகவுள்ள இலங்கை குற்றவாளிகள் சரணடைய விரும்புவதாக தகவல்!
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற “Ratam Ekata” நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவர்களின் கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும், உரிய கலந்துரையாடல்களின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
“போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றதாக தகவல் வெளியாகியள்ளது.
இலங்கையில் போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இலங்கையில் பிரபல பாதாள உலகக்குழுக்களில் உதவியுடன் தங்களது வியாபாராத்தை முன்னெடுத்து வரும் பலர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





