தாய்லாந்து – மலேசியா எல்லைக்கு அருகே படகு விபத்து : பலர் மாயம்!
தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே உள்ள கடற்பகுதியில் இன்று படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் பயணித்த 10 பேர் உயிர் பிழைத்துள்ள நிலையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது.
மியன்மாரின் புதிடாங்கிலிருந்து (Buthidaung) சுமார் 300 பேருடன் புறப்பட்ட படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்பிழைத்தவர்களில் மூன்று மியன்மார் ஆண்கள் மற்றும் இரண்டு ரோஹிங்கியா ஆண்கள் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)





