‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமை யாருக்கு தெரியுமா?
எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன் ‘ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஜனநாயகன் தான் எங்கும் ஹாட் டொபிக்காக இருக்கின்றது.
இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், கோலிவுட் திரையுலகின் முதல் 1000 கோடி ரூபாய் என்ற சாதனையை படைக்குமா? என்பதும் பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, மமிதா பைஜூ முக்கிய ரோலில் நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாடல் வெளியான பிறகு, பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவத் கேசரி திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.
மேலும் ஜனநாயகன் திரைப்படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை, அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். எனவே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






