பாலியல் கல்வித் திட்டம் – புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் அவசியமானதா? பேராயர் விமர்சனம்!
இலங்கையின் புதிய பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்க முன்மொழியப்பட்ட “பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்” குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
மீரிகம-கிணதேனியா பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித ஸ்டீபன் தேவாலயத்தை மீண்டும் திறக்கும் விழாவில் பேசிய அவர், திட்டமிட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் ஜனவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த முயற்சி சர்வதேச அமைப்புகளின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
முன்மொழியப்பட்ட பாடத்திட்டம் 6 ஆம் வகுப்பு முதல் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த முயல்கிறது என்றும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் தொடர்புடைய கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது உண்மையில் கல்வியா? இதுபோன்ற விஷயங்களை சரியான நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பது பெற்றோரின் பொறுப்பு இல்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த திட்டத்தில் ஒரே பாலின உறவுகள் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு பற்றிய பாடங்கள் உள்ளன என்றும், இந்த கூறுகள் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர்கள் அரசாங்கத்திற்கும் கல்வி அமைச்சகத்திற்கும் பணம் கொடுத்துள்ளனர் எனக் கூறிய அவர், இதற்கமையவே அரசாங்கம் புத்தகங்களை அச்சிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.





