அமெரிக்காவின் அதி ரகசிய ஏவுகணையின் படம் முதல்முறையாக வெளியீடு!
அமெரிக்காவின் அதி ரகசிய ஏவுகணை ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவில் சோதனை விமானத்தில் இருந்தபோது முதல்முறையாக படம்பிடிக்கப்பட்டதாக தி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது ரஷ்யா மற்றும் வடகொரியாவிற்கு தனது இராணுவ பலத்தை காட்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அக்டோபர் மாத இறுதியில் விமானப் புகைப்படக் கலைஞர் இயன் ரெச்சியோ ( Ian Recchio ) இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இந்த ஏவுகணை டார்ச்52 (Torch52) எனப்படும் 488,000 பவுண்டு எடையுள்ள B-52H ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸில் (Stratofortress) பொருத்தப்பட்டிருந்தபோது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)





