டென்மார்க்கின் சில பகுதிகளில் கொவிட்-19 பரவல் – சுகாதார கட்டுப்பாடுகள் தீவிரம்
டென்மார்க்கின் சில பகுதிகளில் கொவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மிங்க் (Mink) பண்ணையில் இருந்து கொவிட்-19 வைரஸ் பரவியதாக சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில், ஏழு நகர சபைகளில் சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய குறித்த நகர சபைகளுக்குமிடையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பண்ணையிலுள்ள மிங்க் விலங்குகளையும் அழிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
“கிளஸ்டர் 5” எனப்படும் இந்த மாறுபாடு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த புதிய மாறுபாடு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளஸ்டர் 5 மாறுபாட்டிற்கு எதிராக சில மனிதர்களின் எதிர்ப்பாற்றல் சராசரியாக 3.6 மடங்கு குறைவாகவே செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது தடுப்பூசிகளின் செயல்திறனைப் பாதிக்கக்கூடும் என ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





