பாரிஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்தின் கொள்ளை – பின்னணி குறித்த வெளியான அதிர்ச்சித் தகவல்
பிரான்ஸில் தலைநகர் பாரிஸில் நடந்த பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பான பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பிரபல லூவர் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பெறுமதியான ஆபரணங்கள், யூரோ என்பனவற்றை களவாடி இருந்தனர்.
பாதுகாப்புமிக்க லூவர் அருங்காட்சியகத்திற்குள் அதிநவீன சிசிடிவி பாதுகாப்பு அமைப்பின் பலவீனமே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையர்கள் சிசிடிவி கட்டமைப்பின் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
Wi-fiயின் கடவுச்சொல் வெறும் “Louvre” என்று இருந்ததாக வெளியான தகவல் தொழில்நுட்ப துறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சைபர் பாதுகாப்புக் கொள்கைகளை முற்றிலும் மீறிய இந்தச் செயல், கடவுச்சொல்லின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, கடவுச்சொல் குறித்த தகவல்களை அருங்காட்சியகம் உறுதிப்படுத்தவில்லை. எனினும் அருங்காட்சியகத்தின் உட்புறப் பாதுகாப்பு நடைமுறைகள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி லூவர் அருங்காட்சியகத்தில் 95 மில்லியன் யூரோ மதிப்புள்ள பிரெஞ்சு அரச குடும்பத்தின் எட்டு நகைகள் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





