இலங்கை: மித்தெனியவில் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் பறிமுதல்
தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) முன்னாள் உள்ளூராட்சி வேட்பாளர் சம்பத் மனம்பேரிக்குச்(Sampath Manamperi) சொந்தமான மூன்று வாகனங்கள் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஒரு பேருந்து, ஒரு கார் மற்றும் ஒரு கப் ரக வாகனம் ஆகியவை அடங்கும் தெரிவித்துள்ளனர்.
சம்பத் மனம்பேரியின் மித்தெனிய(Middeniya) பகுதியில் உள்ள வீட்டை சோதனை செய்த போதே குறிப்பிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மித்தெனிய, தலாவ(Thalawa) பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை குற்றச்சாட்டில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.





