2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் – நிதி ஒதுக்கீடு குறித்த விபரம்!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
01. 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடனை 87 சதவீதமாக பராமரிக்க நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளகது.
02. வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
03. அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
04. அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 கட்டங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
05. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் புதிய டிஜிட்டல் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
06. அரச சொத்து முகாமைத்துவ சட்டம் 2026 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்படும்.
07. மக்களுக்கு எதிராக யாரேனும் தவறிழைத்தால் அவர்களுக்கு சட்டத்துக்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.
08. 2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
09. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு நிபுணர் குழுவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
10. இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் இலங்கை வாகன இறக்குமதிக்காக 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.
11. இந்த ஆண்டில் 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளது.
12. 2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
13. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் நெருக்கடிக்கு முந்தைய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு. இது முந்தைய கணிப்புகளை விட நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இருக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
14. வெளிநாட்டு கடன் சேவை கடந்த ஆண்டை விட 760 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கப்படும்.
15. இந்த ஆண்டு வரவு செலவு பற்றாக்குறை 5.2% ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் வதிவிட விசா முறை அறிமுகம் செய்யப்படும்.
17. குருநாகலிலும் காலியிலும் இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டப்பட்டன, ஆனால் அவை இப்போது கைவிடப்பட்டுள்ளன. அவற்றின் நிலுவையில் உள்ள கடன்கள் தீர்க்கப்படும், மேலும் தனியார் துறை முதலீட்டிற்காக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும்.
18. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
19. முதலீட்டு மண்டலங்களுடன் தொடர்புடைய பொருளாதார மண்டலங்களை நிர்மாணிப்பதற்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
20. டிஜிட்டல் பொருளாதார கவுன்சிலை உருவாக்க நடவடிக்கை – டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டுக்கு 2026 இல் 25,000 மில்லியன் முதலீடு செய்யப்படும்.
21. 2026 மார்ச் மாதம் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகமாகும்.
22. ஹிங்குராக்கொட, சீகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்தவும், யாழ்ப்பாண விமான நிலையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
23. அனைத்து அரசு கொடுப்பனவுகளும் டிஜிட்டல் கட்டண முறையின் கீழ் கொண்டு வரப்படும். இணையவழி கொடுப்பனவுகளுக்கு எந்த சேவை கட்டணங்களும் விதிக்கப்படாது.
24. டிஜிட்டல் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கான முதலீட்டு வரி 5 ஆண்டுகளுக்கு நீக்கம்.
25. நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களை 60:40 விகிதத்திற்கு கொண்டு வர நடவடிக்கை.
26. முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ஒரு மெய்நிகர் பொருளாதார வலயம் நிறுவப்படும்.
27. முதலீட்டுச் சபையின் கீழ் திகன மற்றும் நுவரெலியாவில் இரண்டு தகவல் தொழில்நுட்ப வலயங்கள் அமைக்கப்படும்.
28. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கான Broadband Internet வவுச்சர் அட்டைகள் வழங்கப்படும்.
29. திறந்தவெளி சிறைச்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் கைதிகளை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட சிறைச்சாலை நடவடிக்கைகளை விரைவுபடுத்த ரூ. 2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
30. நாடு முழுவதும் 100 புதிய தொலைபேசி கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
31. மஹாபொல புலமைப்பரிசில் ரூ. 2,500 ஆல் அதிகரிக்கப்படும்.
32. அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% ஒதுக்கப்பட்டுள்ளது.
33. தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்காக ரூ. 2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
34. உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மஹாபொல புலமைப்பரிசிலுக்கு மேலதிகமாக மாதந்தோறும் ரூ. 5,000 கொடுப்பனவு வழங்கப்படும்.
35. செயற்கை நுண்ணறிவு சேவை நிலையங்களுக்கு 750 மில்லியன ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
36. ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் வசதி செய்வதற்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
37. ஓட்டிசம் உட்பட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நிறுவ ரூ. 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
38. தொழிற்பயிற்சி நிலையங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 8,000 மில்லியன் ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது.
39. அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களுக்கு ரூ. 11,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
41. 82 ஆரம்ப சுகாதார நிலையங்களை 5 ஆண்டுகளில் புதுப்பிப்பதற்காக 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
42. தேசிய இருதய பிரிவை உருவாக்குவதற்கு 12,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
43. சுவசெரிய சேவைக்காக 4.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
44. கொழும்பில் தேசிய இருதய வைத்தியசாலையை நிறுவுவதற்கான ஆரம்ப பணிகளுக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
45. தம்புள்ளை மற்றும் தெனியாய பிரதேசங்களில் தேசிய மருத்துவமனை தங்குமிடங்களை அமைப்பதற்கு 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
46. மக்கள் மேம்பாட்டு செயற்பாடுகளுக்காக 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
47. பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை வேதனம் 2026 ஆம் ஆண்டு முதல் ரூ. 1,550 ஆக அதிகரிக்கப்படும்; மேலும் அரசாங்கத்தினால் வருகை கொடுப்பனவாக ரூ. 200 வழங்கப்படும். இதன் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தினசரி வேதனம் ரூ. 1,750 ஆக உயரும்.
48. சமூக விஞ்ஞான மற்றும் சுகாதார கணக்கெடுப்புக்கு 570 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
49. பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2042 ஆம் ஆண்டுடன் நிறைவடைகின்றன. அவை அபிவிருத்தி செய்யப்படாவிட்டால் அரசாங்கம் மீளப் பெறும்.
50. கிராமிய பாதைகள் மறுசீரமைப்புக்காக 24,000 மில்லியன் ரூபாய், கிராமிய பாலங்களுக்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
51. பெண் வியாபாரிகளை மேம்படுத்துவதற்காக 240 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
52. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு நிவாரண வட்டியுடன் வீட்டுக்கடன் வழங்கப்படும்.
53. மனித–யானை மோதலை கட்டுப்படுத்துவதற்காக விசேட பயிற்சியுடன் 5,000 சிவில் அதிகாரிகள் நியமனம்.
54. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு 10 மில்லியன் ரூபாய்.
55. நாடகம், சினிமா துறையை மேம்படுத்துவதற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
56. சர்வதேச போட்டிகள் தொடர்பாக வீர வீராங்கனைகளை தயார்ப்படுத்துவதற்கு 1,163 மில்லியன் ரூபாய்.
57. வெங்காயம், கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்காக களஞ்சியசாலைகளை மேம்படுத்துவதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
58. 2030 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு பால் தேவையின் 75% பூர்த்தி செய்யும் இலக்குக்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
59. பெண்களின் நலனோம்புகை திட்டத்திற்காக மேலதிகமாக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
60. 400 நீர்ப்பாசன முறைமைகளுக்கு நடுத்தர கால திட்டத்தின் கீழ் ரூ. 4,000 மில்லியன்; அதில் 100 முறைமைகளை 2026 இல் அமுல்படுத்த 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
61. தம்புள்ளை குளிரூட்டல் களஞ்சியசாலையில் சூரிய சக்தி மின்முறைமை நிறுவ ரூ. 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
62. சீன உதவியுடன் கட்டப்படும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
63. விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்த 800 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
64. யாழ்ப்பாண தென்னை முக்கோணத்திற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
65. தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
66. மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுக்காக மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
67. வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
68. மீனவர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு அங்கிகளை வழங்க ரூ. 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
69. மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
70. மீன்கள் நடமாடும் இடங்களை கண்காணிக்கவும் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தவும் ரூ. 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
71. நீர்ப்பாசனத்துறையை மேம்படுத்த ரூ. 91,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
72. முந்தெனி ஆறு கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் தொடங்க 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
73. பஹல மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்த 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
74. அணைக்கட்டுகள் மற்றும் வாவிகளின் புனரமைப்பு பணிக்காக ரூ. 6,500 மில்லியன்.
75. தொடர் முறைமையை மேம்படுத்த 8,350 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
76. நகர வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
77. நதிகள் வெள்ளப்பெருக்கை முகாமையிட 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
78. பயிர்ச் சேத நட்டஈட்டுக்கு 1,200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
79. 307 SLTB பேருந்துகளின் எஞ்சின் அலகுகளை மாற்ற 2,062 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
80. வெள்ள அச்சுறுத்தல்களுக்கு குறுகிய கால தீர்வுகளுக்காக 250 மில்லியன், வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
81. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிக்காக 10,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
82. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய பாலங்கள் கட்ட 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
83. வீதிப் பாதுகாப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்த 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
84. திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்காக 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
85. பழைய அடுக்குமாடி வீடமைப்பை புனரமைக்க 1,180 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
86. ரயில் திணைக்களத்துக்கு 5 புதிய எஞ்சின் தொகுதிகள் பெற 3,300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
87. அரசு தொழில்முயற்சிகளில் நிலுவை நிதிகளை தீர்க்க 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
88. அரச ஊழியர்களின் முற்பணக் கணக்கு வரையறைக்காக 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
89. ஓய்வூதிய திருத்தங்களுக்கு 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
90. ஆதனக் கடன் திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
91. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய அலுவலகக் கட்டடத்திற்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
92. கடன்பெறுதல் வரையறையை 60 பில்லியனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
93. மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
94. அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு 15,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
95. விவசாய கடன்களுக்காக 1,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
96. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக 7,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
97. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கணினி மற்றும் தரவுத்தள உட்கட்டமைப்புக்காக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.





