02 வருடங்களுக்கு பின் கடலுணவு ஏற்றுமதியை ஆரம்பித்த ஜப்பான்!
சீனாவிற்கான கடலுணவு ஏற்றுமதிகளை ஜப்பான் மீளவும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஹொக்கைடோவில் (Hokkaido) அறுவடை செய்யப்பட்ட 6 மெட்ரிக் டன் (6.6 டன்) ஸ்காலப்ஸ் (scallops) நேற்று முன்தினம் சீனாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது ஆகஸ்ட் 2023 இல் பெய்ஜிங் அனைத்து ஜப்பானிய கடல் உணவுகளையும் தடை செய்த பின்னர் அந்த நாட்டிற்கு அனுப்பப்படும் முதல் ஏற்றுமதியாகும்.
புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவுநீரை வெளியேற்றுவதற்கு சீனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.
குறித்த தடையால் இரண்டு ஆண்டுகளாக கடல்சார் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, தடையை தளர்த்தி இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு பெய்ஜிங் ஜூன் மாதம் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





