பிரான்ஸில் பாதசாரிகள் மீது மோதிய கார் – 10 பேர் படுகாயம்!
பிரான்ஸில் நபர் ஒருவர் பாதசாரிகள் மீது கார் ஒன்றால் மோதி இன்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் தாரி “அல்லாஹு அக்பர்” என்று கத்திக்கொண்டே இந்த தாக்குதல்களை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை தீக்கிரையாக்க முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகாயம் அடைந்தவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலாக சந்தேகிக்கப்படவில்லை எனவும், ஓட்டுநருக்கு “மனநலப் பிரச்சினைகள்” இருப்பதாகவும் அந்தப் பகுதிக்கான அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.





