சத்தீஸ்கர் ரயில் விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு(Update)
இந்தியாவின் சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநில தலைநகர் ராய்ப்பூரில்(Raipur) பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
“இந்த விபத்தில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று பிலாஸ்பூர்(Bilaspur) மாவட்ட ஆட்சியர் சஞ்சய் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஏனைய பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று சஞ்சய் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
இந்தியாவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து – ஐவர் ஸ்தலத்தில் பலி!





