தாய்வான் மீது சீனா போர் தொடுத்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் – அமெரிக்கா எச்சரிக்கை
தாய்வான் தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாய்வான் மீது முற்றுகை நடவடிக்கையை சீனா ஆரம்பித்தால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சீன ஜனாதிபதி நன்கு அறிந்திருப்பார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
CBS செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாத்தியம் இல்லை. அதற்கான வாய்ப்பினை அமெரிக்கா ஒருபோதும் வழங்காது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் தென் கொரியாவில் நடைபெற்ற விசேட சந்திப்பில் அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலைமை குறித்து கலந்துரையாடியிருந்தனர்.
எனினும், இதன்போது தாய்வான் குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாய்வான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாக சீனா கருதிச் செயற்பட்டு வருகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் அமெரிக்கா, தாய்வான் இறையாண்மை கொண்ட ஒரு நாடு என வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறான நிலையில் சீனாவின் முற்றுகையை எதிர்கொள்ளும் வகையில் தாய்வானுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் தென்கொரியாவில் சி ஜின்பிங்கைச் சந்தித்தபோது தைவான் விவகாரம் குறித்து இருவரும் பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.





